காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகள் ராணுவ வீரர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவும் ரகசிய திட்டம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குப்வாரா மாவட்டம், மச்சில் செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று அதிகாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதைக் கண்டு அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் இருதரப்பிலும் … Read more

அக்டோபர் 6ல் 10 படங்கள் ரிலீஸ்

2023ம் ஆண்டின் கடைசி கட்ட மாதங்களில் நுழைந்துவிட்டோம். இன்னும் 90 நாட்களில் இந்த வருடம் முடிவடைய உள்ளது. இதுவரை கடந்து போன 270 நாட்களில் 175 படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்த 90 நாட்களில் 25 படங்கள் வெளிவந்தாலே இந்த ஆண்டில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்து விடும். ஆனால், வெளிவர உள்ள படங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் அது 225ஐக் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது. அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான அக்டோபர் 6ம் தேதி … Read more

நள்ளிரவு வரை நடந்த விவாதத்தில் உடன்பாடு: முடக்கத்தில் இருந்து தப்பியது அமெரிக்கா| Agreed in midnight debate: US escapes shutdown

வாஷிங்டன்-அரசு செலவுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக நள்ளிரவு வரை நடந்த விவாதங்களுக்குப் பின், அமெரிக்க பார்லிமென்டில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, முடங்கும் அபாயத்தில் இருந்து நாடு தப்பியது. அமெரிக்காவில் அரசு செலவினங்கள், ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவற்றுக்கான நிதி ஒதுக்கீடுக்கு, அந்த நாட்டின் பார்லிமென்ட் ஒப்புதல் தேவை. நேற்று துவங்கி, வரும் நவ., மாதம் வரையிலான காலத்துக்கான செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்க பார்லிமென்ட் கூடியது. அரசின் செலவின திட்டங்களுக்கு செனட் சபை ஒப்புதல் அளித்தது. ஆனால், மக்கள் பிரதிநிதிகள் … Read more

Bigg Boss Tamil Season 7 Grand Launch LIVE: பிக் பாஸ் தமிழ் சீசன் 7.. ஆரம்பமே கேப்டன் டாஸ்க்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அறிவித்தபடியே பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் சற்றுமுன் தொடங்கியது. இதுவரை கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியதை போலவே 7வது சீசனையும் தொகுத்து வழங்க களமிறங்கி உள்ளார். இந்த முறை 2

ஆபரேஷன் விஜய் – 1971 | நாடக உருவாக்க நிகழ்வை துவக்கி வைத்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: 1971-ம் ஆண்டு நிகழ்ந்த இந்திய – பாகிஸ்தான் போரின் வீரக் கதையை எடுத்துச் சொல்லும் வகையில், ‘ஆபரேஷன் விஜய் – 1971’ நாடக உருவாக்க நிகழ்வு நடைபெற்றது. இதனை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்தார். சென்னை வேளச்சேரியில் ‘ஆபரேஷன் விஜய் – 1971’நாடக உருவாக்க நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவங்கி வைத்தார். சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில், வரலாற்று முக்கியத்துவம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த நிகழ்ச்சியாக ‘ஆபரேஷன் விஜய் – 1971’ என்ற … Read more

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு மாற்றுவது குறித்து மருத்துவர் கருத்து | ஆந்திரா

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு மாற்றுவது குறித்து சிறுநீரக மருத்துவர் வசிஷ்டா ததாபுடி கருத்து தெரிவித்துள்ளார். இவர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் லாங்கோன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் சொசைட்டி ஆஃப் நெப்ராலஜியின் ஆறாவது ஆண்டு மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் மருத்துவர் வசிஷ்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு மாற்றுவது தொடர்பான சாத்தியம் குறித்து அவர் பேசி … Read more

உலகக் கோப்பை தொடக்க விழாவில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் – என்ன தெரியுமா?

ICC World Cup 2023 Opening Day Ceremony: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023 தொடரின் லீக் சுற்று போட்டிகள் அக். 5ஆம் தேதி அன்றே தொடங்கப்பட உள்ளது. நவ. 19ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ள நிலையில், இதன் தொடக்க விழா அக். 4ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் போட்டி நடைபெற உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.  அக். 4ஆம் தேதி இரவு 7 மணி … Read more

வந்தே பாரத் ரயிலுக்காக மற்ற ரயில்கள் பயண நேரம் அதிகரிப்பு : பயணிகள் அதிருப்தி

சென்னை வந்தே பாரத் ரயிலுக்காக வைகை, பொதிகை பாண்டியன்  எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயண நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை- நெல்லை இடையே மதுரை மார்க்கமாகச் செல்லும் வந்தே பாரத் ரயிலால் பல ரயில்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.  ஆங்காங்கே இந்த ரயில்கள் நிறுத்தப்பட வேண்டிய சூழல்  உருவாகி உள்ளது. எனவே தென்னக ரயில்வே வைகை, பொதிகை, பாண்டியன் விரைவுவண்டி ரயில்களின் பயண நேரத்தை இன்று முதல் மாற்றி உள்ளது.  இந்த நேரமாற்றம் காரணமாகப் பயண நேரம் … Read more

தனுஷ் வெளியிட்ட தனது 50வது படத்தின் அப்டேட்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களை ஒப்பந்தம் செய்து நடித்து வருகிறார். தற்போது தனது 50வது படத்தை தனுஷ் இயக்கி நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்று தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 50வது படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளதாக தனது புதிய போட்டோ உடன் பகிர்ந்துள்ளார். இப்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.