செப்., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.62 லட்சம் கோடி| GST collection rises 10 pc to over Rs 1.62 lakh cr in Sep

புதுடில்லி: செப்., மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,62,712 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: செப்., மாத ஜிஎஸ்டி வசூல் 1,62,712 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது. இதில் சிஜிஎஸ்டி மூலம் ரூ.29,818 கோடியும் எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.37,657 கோடியும் ஐஜிஎஸ்டி மூலம் ரூ.83,623 கோடியும்(பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.41,145 கோடியும் சேர்த்து) செஸ் வரி மூலம் ரூ.11,613 … Read more

சிவாஜிகணேசன் 96வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், இளையராஜா, கமல்ஹாசன் வாழ்த்து

தமிழ் சினிமா உலகில் நடிகர் திலகம் என அன்புடன் அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்கள் இல்லை என்று சொல்லுமளவிற்கு பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருக்குப் பிறகு வந்த நடிகர்களில் அவருடைய தாக்கம் சிறிதேனும் இருக்கும் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நடிகர் திலகத்தின் 96வது பிறந்தநாள் இன்று திரையுலகினராலும், அவரது குடும்பத்தினராலும், ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவாஜிகணேசன் பிறந்தநாளை முன்னிட்டு இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், … Read more

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க் நகரம்: விமான நிலையம் மூடல்; மின்சாரம் கட்| Flooded New York City Airport Closure; Power cut

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொட்டி தீர்த்த கனமழையால், அந்நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால், அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு மிக கனமழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வழிந்தோடுகிறது. முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில், முழங்கால் அளவுக்கு மழைநீர் … Read more

பிக் பாஸ் சீசன் 7 கன்பார்ம் போட்டியாளர்.. விக்ரம் பட நடிகை மாயா கிருஷ்ணன் யார் இவர்?

சென்னை: விக்ரம் படம் மூலம் பிரபலமான நடிகை மாயா கிருஷ்ணன் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. மாடல் அழகியான மாயா கிருஷ்ணன் 1992ம் ஆண்டு மதுரையில் பிறந்தார். மதுரை டிவிஎஸ் லட்சுமி மெட்ரிக்குலேசன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர். பெங்களூரு அம்ரிதா பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். {image-im11-down-1696162938.jpg

நடுரோட்டில் திடீரென பற்றியெரிந்த எலக்ட்ரிக் கார்! – `தீ'-யாய் பரவும் வீடியோ

சாமானிய வாகன ஓட்டிகளின் பார்வையில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கும் சூழலில், அதற்கடுத்த நகர்வாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் பேட்டரிகளால் இயங்கக்கூடிய எலக்ட்ரிக் பைக்குகள், எலக்ட்ரிக் கார்கள், எலக்ட்ரிக் பேருந்துகள் போன்றவை பயன்பாட்டுக்கு வந்துகொண்டிருக்கின்றன. எலக்ட்ரிக் கார் இருப்பினும், அவற்றின் விலையும் சாமானியர்களுக்கு அதிகம்தான். அதேசமயம், மத்திய அரசு பேட்டரி வாகன விற்பனையாளர்களுக்கு வரிச்சலுகையும் அளித்துவருகிறது. இன்னொருபக்கம், அவ்வாறான எலக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு என்பது இன்னும் முழுமையாக அனைவரிடத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம். … Read more

மொழி என்பது வெளிப்பாட்டின் கருவி: உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு

சென்னை: இந்திய சமூகத்தின் உலகளாவிய கலந்துரையாடல் மன்ற அமைப்பின் தொடக்க விழாவில், “மொழி என்பது வெளிப்பாட்டின் கருவி” என்று உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்களின் இந்திய சமூகத்தின் உலகளாவிய கலந்துரையாடல் மன்ற அமைப்பின் (Indian Society for Universal Dialogue -ISUD) தொடக்க விழா பல்கலைக்கழக கலையரங்கத்தில் நேற்று (30 செப்டம்பர் 2023) நடைபெற்றது. இம்மன்ற அமைப்பானது சட்டம் பயிலும் மாணவர்களால் சமகால … Read more

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணி | மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்பு

புதுடெல்லி: தூய்மை இந்தியா திட்டத்தின் 9 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று நடைபெற்ற தூய்மைப் பணியில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். சென்னை கடற்கரைப் பகுதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். 2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது. அதே ஆண்டு அக். 2-ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளன்று ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். அதன் 9-ம் ஆண்டு தினம் … Read more

1992 World Cup: 1 பந்தில் 22 ரன்கள்… தென்னாப்பிரிக்காவின் கனவை கலைத்தது மழையா… பேராசையா…?

1992 World Cup, South Africa: 1992ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து நாடுகள் முதல்முறையாக உலகக் கோப்பை தொடரை நடத்தியது. ஆஸ்திரேலிய அணி நடப்பு சாம்பியனாக இந்த தொடரை எதிர்கொண்டது. அந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய 9 அணிகள் இதில் மோதின. ஜிம்பாப்வே மட்டும் டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணியாகும். அந்த தொடரில் நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் … Read more

ஸ்டாலின் எச்சரிக்கை… அண்ணாமலை டெல்லி பயணம்: பரபரக்கும் தமிழக அரசியல் களம்

மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ளன. ஆட்சியில் இருக்கும் திமுக, அனைத்து அமைச்சர்களுக்கும் குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்கி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அப்பகுதி தேர்தல் பார்வையாளர்களாக அவர்களை நியமித்துள்ளது. மாவட்ட செயலாளர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேர்தலில் திமுக வெற்றி பெறாத … Read more

இன்றுமுதல் வணிக பயன்பாட்டு எரிவாயு விலை  உயர்வு

சென்னை இன்று முதல் வணிக பயன்பாட்டு சிலிண்டர் றிய; ௨௦௯ உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எரிவாயு சிலிண்டரின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய திருத்தப்பட்ட விலையின் படி சென்னையில் வணிகப்பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,898-க்கு விற்பனையாகிறது. கடந்த மாதத்தில் (செப்டம்பர்) இது ரூ.1,685-க்கு விற்பனையானது. டெல்லியில் புதிய விலைபடி, ரூ.1,731.50க்கு விற்பனையாகிறது. முந்தைய விலை ரூ.1522.50. கொல்கத்தாவில் ரூ.1,839.50க்கும் (முந்தைய விலை ரூ.1,636) மும்பையில் ரூ.1,684-க்கும் முந்தைய விலை (ரூ.1,482) விற்பனை செய்யப்படுகிறது. இந்த … Read more