கனமழை வெள்ளத்தால் நியூயார்க் ரயில் விமான நிலையங்கள் மூடல்

நியூயார்க் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நியூயார்க்கில் விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.  அமெரிக்காவின்  நியூயார்க் நகரில் இடைவிடாமல் மழை பெய்து  வருகிறது.  கனமழையால் வெள்ளம்  ஏற்பட்டு நகரின் பல பகுதிகள் நீரில் முழுகி உள்ளன. இதனால் நகரமே முடங்கிப் போன நிலையில் வெள்ள நீர் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தையும் சூழ்ந்தது. எனவே பாதுகாப்பு கருதி விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.  மேலும் ரயில் நிலைய சுரங்கப்பாதைக்குள் வெள்ளம் புகுந்ததால் சுரங்கப்பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன.  இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். நகரில் சாலைகளில் வெள்ள … Read more

உண்மை நிலையை மறந்து பேசி விட்டார் கருப்பண்ணன்: முனுசாமி விளக்கம்| Karuppannan has forgotten the reality and talked: Munusamy explained

கிருஷ்ணகிரி: ”உண்மை நிலையை மறந்து, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., கருப்பண்ணன் பேசிவிட்டார்,” என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி கூறினார். கிருஷ்ணகிரியில், நேற்று அவர் கூறியதாவது:பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்த, அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு குறித்து, நாங்கள் ஏற்கனவே அறிவித்து விட்டோம். எங்கள் கூட்டணியிலிருந்து, பா.ஜ.,வை வெளியேற்றி விட்டோம்.எங்கள் தலைவர்களை தொடர்ந்து விமர்சித்ததாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது என, விளக்கமும் கொடுத்து விட்டோம். இருப்பினும், தொடர்ந்து சமூக வலைதளங்கள், அரசியல் தலைவர்கள், ஒரு சில அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களை … Read more

‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் – சமுத்திரகனி

சேலம் டால்மியா போர்டு அருகே நடந்த ஹோட்டல் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் நடிகர் சமுத்திரக்கனி நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் நடிகர் சித்தார்த்திற்கு என்ன நடந்தது என்று தெரியாது. நான் வேறு இடத்தில் இருந்து வந்து இருக்கிறேன். காவிரி நதி நீர் பிரச்சினை எப்போதும் இருந்து கொண்டு இருக்கிறது. முடிவு எல்லாம் அவர்கள் (தலைவர்கள்) பேசி பார்த்து முடிவு செய்வார்கள். ஆளாளுக்கு சத்தம் போட்டுக்கொண்டு இருந்தால் ஒன்றும் நடக்காது. இதை தாண்டி தற்போது வந்து இருக்கும் நிகழ்ச்சி … Read more

Gautham Menon: சூப்பரா வந்துருக்கு.. லியோ படம் குறித்து கௌதம் மேனன் சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் விஜய் லீட் கேரக்டரில் நடித்து இந்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள படம் லியோ. படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீடு ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும் படத்திற்கான ப்ரமோஷன்களை படக்குழுவினர் அதிகளவில் முடுக்கி விட்டுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு

புதுடெல்லி, கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 36 லட்சம் சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2002-ல் வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. தாமாக முன்வந்து விசாரணை வழக்கை விசாரித்த வேலூர் கோர்ட்டு, … Read more

'இது எனது கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம்' – அஸ்வின்

கவுகாத்தி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் காயம் காரணமாக விலகியதால் கடைசி நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த 37 வயது சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அஸ்வின் நேற்று டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த உலகக் கோப்பை போட்டியை அனுபவித்து விளையாடுவது என்னை நல்ல நிலையில் வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பை தொடர் இந்தியாவுக்காக நான் ஆடும் … Read more

இலங்கையில் தமிழ் நீதிபதி பதவி விலகியது குறித்து விசாரணை; அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவு

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் முல்லைதீவு மாவட்ட நீதிபதியாக இருந்தவர் சரவணன் ராஜா. தமிழரான இவர் சர்ச்சைக்குரிய குருந்தூர் மலை தொடர்பான வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. தீர்ப்பை மாற்றி அறிவிக்கவும் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதன்காரணமாக சரவணன் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறினார். தற்போது அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. இந்த நிலையில் … Read more

Weekly Horoscope: வார ராசி பலன் 01-10-2023 முதல் – 07-10-2023 | Vaara Rasi Palan | Astrology |

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

பெற்றோரையும், பெரியோரையும் மதிப்பதே சனாதனம்: வெங்கய்ய நாயுடு விளக்கம்

சென்னை: ‘பெற்றோரையும், பெரியோரையும் மதிப்பதே சனாதனம்’ என முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். ஹரிஜன சேவா சங்கம் சார்பில் ஆச்சார்ய வினோபா பாவே ஜெயந்தி, மகாத்மா காந்தி ஜெயந்தி, நிர்மலா தேஷ்பாண்டே ஜெயந்தி மற்றும் சங்கத்தின் தலைவர் சங்கர் குமார் சன்யாலின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டம் சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமை வகித்து மகாத்மா காந்தி, ஆச்சார்ய வினோபா பாவே, நிர்மலா … Read more

கவனத்தை திசைதிருப்பும் ஆயுதமானது சமூக ஊடகம்: மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி கவலை

கோவா: கோவா மாநிலத்தின் மர்மகோவா பகுதியில் உள்ள ஜி.ஆர்.காரே சட்டக் கல்லூரியில் ‘ஜிஆர்கே – சட்ட பேச்சுகள்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா கிளை நீதிபதி மகேஷ் சோனக் பேசியதாவது: நாம் தற்போது கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போன்களை போற்றும் யுகத்தில் வாழ்கிறோம். ஆனால், சிந்திக்க முயற்சிக்கும் மனிதர்களை பற்றி சந்தேகப்படுகிறோம் அல்லது எச்சரிக்கையாக இருக்கிறோம். செயற்கை நுண்ணறிவுக்கு சில சிறப்புகள் உள்ளன. இயந்திரங்களும், கணிப்பு நெறிமுறைகளும் எவ்வளவு புத்திசாலித்தன மாகவும் … Read more