இரானி கோப்பை கிரிக்கெட்: சவுராஷ்டிரா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இன்று மோதல்

ராஜ்கோட், ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா-ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஹனுமா விஹாரி தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் மயங்க் அகர்வால், சாய் சுதர்சன், நவ்தீப் சைனி, சர்ப்ராஸ்கான் உள்ளிட்ட வீரர்களும், ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணியில் புஜாரா, ஹர்விக் தேசாய், ஷெல்டன் ஜாக்சன் உள்ளிட்ட வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். தினத்தந்தி Related Tags : இரானி … Read more

ஸ்காட்லாந்து குருத்வாராவில் இந்திய தூதர் தடுத்து நிறுத்தம்

இங்கிலாந்து நாட்டுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர் முன்தினம் கிளாஸ்கோ நகரில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு சென்றார். ஆனால் அங்கு திரண்டிருந்த சீக்கிய வாலிபர்கள் சிலர் விக்ரம் துரைசாமியை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். அந்த வாலிபர்கள் விக்ரம் துரைசாமியின் காரை சூழ்ந்துகொண்டு, திரும்பி செல்லும்படி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து விக்ரம் துரைசாமி … Read more