உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் 50வது ஆண்டு நினைவு விழா!

நடிகர் மற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி நடித்து கடந்த 1973ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. மஞ்சுளா, லதா, சந்திரகலா, நம்பியார், மனோகர், நாகேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஜப்பான் என பல நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அந்த காலகட்டத்தில் பல அரசியல் சிக்கல்களை தாண்டி வெளிவந்த இத்திரைப்படம் தியேட்டரில் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனைப் படைத்தது.

தற்போது இந்தப் படம் வெளியாகி 50 ஆண்டுகளை நெருங்குவதை தொடர்ந்து இதன் பொன்விழாவை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வருகின்ற நவம்பர் 5ம் தேதி சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்தில் சிறப்பு விழா நடத்துகின்றனர். இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகை லதா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் கலந்து கொள்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.