மதுரை மதுரை உயர்நீதிமன்றக் கிளை சிறுபான்மையினர் என்றாலே சமூக விரோத செயல்களை செய்பவரா என வினா எஉப்பு உள்ளது. ஹாஜா சரீஃப் என்னும் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் 2007-2008 -ம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுக் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் மனித நீதி பாசறை என்ற அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இதனைக் காரணமாகக் கூறி அவருக்கு 5 ஆண்டுகளுக்கான பதவி உயர்வு, பணப்பலன்கள் வழங்கவில்லை என அவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். […]
