Best Diwali Gifts In Amazon Sale 2023: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் நவ. 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் 12 நாள்களே உள்ள நிலையில் பலரும் தங்களுக்கான புத்தாடைகள், பட்டாசுகள், புதிய வீட்டு உபயோக சாதனங்கள் உள்ளிட்டவற்றை வாங்கியிருப்பார்கள். மேலும், இது மாதத் தொடக்கம் என்பதால் பலருக்கும் இப்போதுதான் மாதச் சம்பளமும், போனஸ் ஆகியவற்றை கொடுத்திருப்பார்கள்.
அந்த வகையில், தீபாவளி தினத்தன்று பலரும் தங்கள் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு பரிசை வழங்க நினைப்பார்கள். குறிப்பாக, மனைவிமார்களுக்கு, கணவன்மார்கள் பரிசு வழங்க வேண்டும் என விரும்புவார்கள். ஆனால், இந்த மாதம் ஏற்கெனவே அதிக செலவு இருக்கும் என்பதால் அவர்களிடம் பெரிதாக பட்ஜெட்டும் இருக்காது.
எனவேதான் வரும் தீபாவளிக்கு உங்கள் மனைவிக்கு உபயோகமாகும் வகையில் சிறந்த பொருள்களை அதுவும் ரூ.1000க்குள் உள்ள பொருள்களை இங்கு காணலாம். அதன்மூலம், நீங்கள் உங்கள் மனைவியை மகிழ்ச்சியில் ஆழ்த்துங்கள். அமேசான் தளத்தில் 1000 ரூபாய்க்கும் கீழ் கிடைக்கும் இந்த பொருள்களை நீங்கள் நிச்சயம் பரிசாக வழங்கலாம். மேலும், இது அமேசான் தளத்தின் தள்ளுபடி காலம் என்பதால் இப்போதே ஆர்டர் செய்து வாங்கிவைத்துக்கொண்டு தீபாவளிக்கு பரிசளிக்கலாம். zeenews.india.com/tamil/technology/best-offers-for-32-inch-led-smart-tv-in-amazon-great-indian-festival-2023-470284
beatXP Marv Neo Bluetooth Calling Smart Watch
இந்த ஸ்மார்ட் வாட்ச் தற்போது 85 சதவீத தள்ளுபடியுடன் 999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இருப்பினும், அதன் அசல் விலை 6,499 ரூபாயாகும். இந்த வாட்ச் 1.85 இன்ச் HD டிஸ்ப்ளே, புளூடூத் அழைப்பு மற்றும் 100க்கும் மேற்பட்ட விளையாட்டு முறைகளைக் கொண்டுள்ளது.
BoAt Rockerz 255 Pro+ Bluetooth Neckband
இது அமேசானில் 75 சதவீத தள்ளுபடியுடன் 999 ரூபாய்க்கு வாங்கலாம். அமேசானில் இதன் அசல் விலை 3,990 ரூபாய் ஆகும். இது 10MM டிரைவர்ஸ் மற்றும் 10 நிமிட சார்ஜிங்கில் 10 மணிநேர ஆடியோ பிளேபேக்கைக் கொண்டுள்ளது.
AGARO HS1119 3-in1 Hair Styler
இந்த ஹேர் ஸ்டைலரின் அசல் விலை 21,999 ரூபாயாகும். இந்த ஹேர் ஸ்ட்ரெய்ட்னர் அமேசானில் 55 சதவீத தள்ளுபடியுடன் 999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது 3 பயன்களை கொண்ட ஒரே தயாரிப்பு ஆகும். இதில் நீங்கள் முடியை நேராக்கலாம், சுருட்டலாம் மற்றும் சுருக்கலாம்.
AGARO HD-1214 Premium Hair Dryer
இந்த ஹேர் ட்ரையர் அமேசான் விற்பனையில் 20 சதவீத தள்ளுபடியுடன் 995 ரூபாய்க்கு வாங்கலாம். இதன் அசல் விலை ரூ.1,245. இந்த ஹேர் ட்ரையர் 1400W சக்தியுடன் வருகிறது. இது 2 வேக முறைகள் மற்றும் 3 வெப்பநிலை அமைப்புகளைக் கொண்டுள்ளது.
boAt Airdopes Atom 81 TWS Earpods
இந்த இயர்பட்களை அமேசானின் தள்ளுபடி விற்பனையில் இருந்து 999 ரூபாய்க்கு வாங்கலாம். இதன் அசல் விலை 4490 ரூபாயாகும். இந்த தள்ளுபடி விற்பனையில் இதற்கு 78 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் முக்கிய அம்சங்களைப் பற்றி பார்த்தால், 13MM டிரைவர்ஸ் மற்றும் 50 மணிநேரம் வரை பிளேபேக் டைம்மை கொண்டுள்ளது.