சாரா டெண்டுல்கர் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் நீண்ட நாட்களாக டேட்டிங் செய்வதாக வதந்தி பரவிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அவர்கள் சிறந்த நண்பர்களாக கூட இருக்கலாம். இந்தநேரத்தில் மும்பையில் நடந்த நிகழ்வில் மீண்டும் சுப்மான் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் ஒன்றாக தென்பட்டுள்ளனர். அப்போது யாரும் புகைப்படம் எடுத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். மும்பையில் உலக கோப்பை லீக் போட்டி நடைபெறுவதால் இந்திய அணி இப்போது மும்பையில் முகாமிட்டுள்ளது. அப்போது பேஷன் மற்றும் விளம்பரதாரர் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததில் மும்பையில் உள்ள பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றனர்.
இதன் ஒருபகுதியாக சாரா டெண்டுல்கர் கலந்து கொள்ள, அங்கிருந்த சுப்மான் கில்லும் கலந்து கொண்டிருக்கிறார். சாரா மற்றும் சுப்மான் கில்லுடன் மற்ற நண்பர்களும் இருந்தனர். மேலும் ஷுப்மான் தனது தோழி சாராவுடன் புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துவிட்டதாகக் கருதப்படுகிறது. அவர்கள் ஒருவரையொருவர் டேட்டிங் செய்கிறார்கள் என்ற வதந்திகளுக்கு இது வலுசேர்க்கும் என்பதால் புகைப்படத்தை கில் திட்டமிட்டே தவிர்த்திருக்கிறார். அதுவும் உலக கோப்பை நடைபெறும் நேரம் என்பதால் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருவரும் இருந்திருக்கின்றனர்.
சாரா அண்மையில் மும்பையில் உள்ள ஜிம்மிலிருந்து வெளியே வருவதை பார்க்க முடிந்தது. அவர் தனது காரில் அமர்ந்து செல்வதற்கு முன்பு வெளியே நின்றிருந்த புகைப்படக்காரர்கள் சாராவை கிளிக் செய்தனர். அத்துடன் கேமராமேன் ஒருவர், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றது குறித்து அவரிடம் கருத்து கேட்டனர். அதற்கு சாரா சிரித்துக்கொண்டே காரில் புறப்பட்டுச் சென்றனர்.
View this post on Instagram
சுப்மான் கில்லை பொறுத்தவரையில் நடப்பு உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். உலகக் கோப்பையின் தொடக்கத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டு, முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஷுப்மான் 2023 ஆசிய கோப்பையை சிறப்பாக விளையாடினார். அவர் 6 போட்டிகளில் 302 ரன்கள் எடுத்தார். இந்த ஆண்டு இதுவரை 5 சதங்களை அடித்துள்ள கில் புனேவில் விளையாடிய ஆட்டத்தை நேரில் பார்க்க வந்திருந்தார் சாரா. அந்த போட்டியில் கில் சிக்சர் அடித்ததை அவர் கொண்டாடிய வீடியோவும் வைரலாகியுள்ளது.