விக்ரம் நடிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எப். குறித்த இந்த கதையில் விக்ரமின் தோற்றம் மற்றும் நடிப்பு மிரட்டலாக அமைந்துள்ளது. இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் […]