வாஷிங்டன்: அமெரிக்காவில் 24 வயதான வருண் என்ற இந்திய மாணவரை, அந்நாட்டு வாலிபர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த வருண், உயிர் பிழைப்பது கடினம் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள வால்பரைசோ நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் வருண் கத்தியால் தாக்கப்பட்டார். கத்தியால் குத்திய ஜோர்டான் ஆண்ட்ராட்(24) என்ற அமெரிக்க வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பயங்கர ஆயுதத்தை பயன்படுத்தியது மற்றும் கொலை முயற்சி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வருண் உடல்நிலை குறித்து வெளியான தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: கத்திக் குத்தால் காயமடைந்த வருண் போர் வெய்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காயத்தை பார்க்கும் போது, அவர் உயிர் பிழைப்பதற்கு 5 சதவீதமே வாய்ப்பு உள்ளது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் எனக்கூறப்பட்டு உள்ளது.
ஜோர்டான் ஆண்ட்ராட் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: மசாஜ் செய்ய வேண்டி அங்கு வந்தேன். யாரும் இல்லாததால் மற்றொரு அறைக்கு சென்றேன். அங்கிருந்த வருணை பார்த்த போது, வித்தியாசமாக தெரிந்தார். அவரால் அச்சுறுத்தல் ஏற்படும் எனக்கருதி, அவரை கத்தியால் குத்தினேன் எனக்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement