`லியோ’ படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் விஜய், த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மரியம் ஜார்ஜ், ‘பிக் பாஸ்’ ஜனனி, மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டியன் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
இவ்விழாவில் பேசிய இயக்குநரும் ‘லியோ’வின் வசனகர்த்தாவில் ஒருவருமான ரத்ன குமார், “எத்தனை பேர் இருந்தாலும் என் போகஸ் விஜய் சார் மேலதான் இருக்கும். எனக்கு சினிமா ஆசை வர்றதுக்கு முக்கியக் காரணம் அவர்தான். பத்திரிகையில் எல்லாம் இவர் முகத்தைப் போடமாட்டோம்ன்னு சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னைக்கு மாஸ் காட்ட அவரோட ஒரு புகைப்படம் இருந்தால் போதும்.

‘மாஸ்டர்’ படத்தில் கதைக்காக ‘வாத்தி ரைடு’ பாடலை எழுதினோம். அதன்பிறகு, ஐடி ரைடு வந்துது. லியோவில் ‘நான் ரெடிதான்…’ என எழுதினோம், அது எதுக்கு என்று இப்போ உங்களுக்கே தெரியும். விஜய் சார் கூட ரெண்டு படம் பண்ணிட்டேன். அவர்கிட்ட பேசும்போது யாரையும் நிக்க வைக்க மாட்டார். உடனே சேர் எடுத்துட்டு வரச் சொல்லுவார். அவரைப் பொருத்தவரை சின்னவங்க, பெரியவங்க என்றெல்லாம் கிடையாது. எல்லோரையும் சமமாத்தான் நடத்துவார். எவ்வளவு உயரத்துல பறந்தாலும் பசிச்சா கீழதானே வரனும்!” என்று பேச அரங்கமே ரசிகர்களால் அதிர்ந்தது. உடனே விஜய்யும் ரத்னா குமாரைக் கட்டியணைத்தார்.