நேரு உள்விளையாட்டு அரங்கில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கோலாகலமாக நடைபெற்றுவரும் `லியோ’ வெற்றி விழாவில் நடிகர் விஜய் குறித்தும் ‘லியோ’ படத்தின் ஃபிளாஷ்பேக் குறித்தும் பேசினார் நடிகர் மன்சூர் அலிகான்.
இதுகுறித்து பேசிய அவர், “நெஞ்சில் குடியிருக்கும் தளபதி ரசிகர்களுக்கு நான் சொல்லும் பிளாஷ்பேக் ‘லை (lie)….'” எனப் பாடலாகப் பாடி தன் பேச்சைத் தொடங்கினார் மன்சூர் அலிகான்.
பின்னர், “எஸ்.ஏ.சி ஒரு தீர்க்கதரிசி! தமிழகத்தின் `நாளைய தீர்ப்பு’ விஜய்யாக இருக்க வாழ்த்துகள். படத்துல நானும், விஜய் தம்பியும் தம் அடிப்போம், குடிப்போம். அதுலாம் சும்மா பொய்… அதுக்கு அடிமையாகித்தான் பலர் சீரழிஞ்சுட்டு இருக்காங்க.” என்று அறிவுறுத்தினார்.

மரியம் ஜார்ஜ் பற்றிப் பேசிய, மன்சூர் அலிகான், “விஜய்யைக் காப்பாத்த விஜயகாந்த் மாதிரி ஃபோர்ஸ் வரும்னு பார்த்தா… சூட்கேஸ் தூக்கிட்டு இவர் வந்து நிற்கிறார். அதைப் பாத்துட்டு ரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டர்ல வயிறு வலிக்கச் சிரிச்சேன். ஆனா ரசிகர்கள் இவருக்குப் பயங்கரமா கத்தினாங்க!” என்றவர், தொடர்ந்து, “த்ரிஷா படத்துல இருக்காங்கன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷம். ஆனா, அவங்களை விமானத்துலேயே கூட்டிட்டுப் போயிட்டாங்க. சரி, மடோனா பாப்பா வந்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா, அவங்க தங்கச்சி ரோல்!” என தன் டெம்ப்ளேட்டில் கலகலப்பாகப் பேசினார்.