வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லிஸ்பன்: இந்தியா- போர்ச்சுகல் இடையிலான உறவில் வர்த்தகம் மற்றும் முதலீடு வலுவான உந்து சக்திகளாக உள்ளன என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
போர்ச்சுகல் நாட்டிற்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆண்டனியோ கோஸ்டாவை சந்தித்து பேசினார். இது குறித்து ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது: இருதரப்பு உறவை பற்றிய ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர, சுகாதாரம், மருந்தகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் மேம்பட என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தோம்.
போர்ச்சுகலில், இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தடம் பதித்துள்ளன. இந்தியா மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கிடையேயான உறவை பற்றிய பல்வேறு விஷயங்களை ஆலோசித்தோம். இந்தியா- போர்ச்சுகல் இடையிலான உறவில் வர்த்தகம் மற்றும் முதலீடு வலுவான உந்து சக்திகளாக உள்ளன. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement