ஃபோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவி காரில் கூடுதல் பாடி கிராபிக்ஸ் பெற்ற GT எட்ஜ் ட்ரையல் எடிசன் விற்பனைக்கு நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1.5 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜினுடன் டைகன் ஜிடி எட்ஜ் ட்ரையல் எடிசன் ஆனது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.
Volkswagen Taigun GT Edge Trail Edition
டைகன் ஜிடி டிரெயில் எடிஷன் எஸ்யூவி காரில் 150 hp பவர், 250 Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் மட்டுமே பெறுகிறது, மேலும், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ்கள் இரண்டிலும் வழங்கப்படும்.
சிறப்பு ட்ரையல் எடிசனில் தோற்ற அமைப்பில் பாடி டெக்கல் மற்றும் கிராபிக்ஸ் மற்றும் பிளாக் அவுட் 17 இன்ச் அலாய் வீல் ஆகியவற்றின் உதவியுடன் முரட்டுத்தனமான தோற்றம். வண்ண விருப்பத்தை கொண்டிருக்கும். டிரெயில் பதிப்பு கார்களில் கார்பன் ஸ்டீல் கிரே மேட் மற்றும் டீப் பிளாக் பேர்ல் ஆகிய நிறங்களில் வழங்கப்படும்.
சிவப்பு தையல் கொண்ட கருப்பு நிற லெதேரேட் இருக்கை, மற்ற மாறுபாடுகளில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள, ஜிடி எட்ஜ் டிரெயில் எடிஷன் இருக்கைகள், சிவப்பு சுற்றுப்புற விளக்குகள் மற்றும் அலுமினிய பெடல் பொறிக்கப்பட்டுள்ளது.
மற்ற வசதிகளை பொறுத்தவரை, 10.25 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆதரவு, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், காற்றோட்டமான அமைப்பினை பெற்ற முன் இருக்கைகள் மற்றும் மின்சார சன்ரூஃப் ஆகிய வசதிகள் உள்ளன.
ஃபோக்ஸ்வேகன் டைகன் ஜிடி ட்ரையல் எடிசன் விலை நாளை அறிவிக்கப்பட உள்ளது.