இந்தியன்-2வை தொடர்ந்து இந்தியன்-3 படத்திலும் நடித்து வரும் கமல்ஹாசன்

கமல்ஹாசன் – ஷங்கர் ஆகிய இருவரும் இந்தியன் படத்தில் முதன்முதலாக இணைந்த நிலையில் தற்போது இந்தியன்-2வில் மீண்டும் இணைந்தார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதோடு இந்தியன்-2 படத்திற்காக படமாக்கப்பட்ட காட்சிகள் அதிகமாக இருப்பதால், அந்த கதையை வைத்து இன்னொரு பாகத்தையும் உருவாக்குவதற்கு இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். அதன் காரணமாக தற்போது கமலிடத்தில் இந்தியன்- 3 படத்தில் நடிப்பதற்கும் 40 நாட்கள் கூடுதலாக கால்சீட் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது விஜயவாடா, விசாகப்பட்டினம் பகுதிகளில் நடைபெறும் இந்தியன்- 3 படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் கமல். மேலும் இந்தியன்-2 படம் அடுத்த ஆண்டு ஏப்ரலில் திரைக்கு வரும் நிலையில், இந்தியன்-3 படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள். இதன் காரணமாகவே எச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கும் 233வது படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.