டப்ளின்,
அயர்லாந்து தலைநகர் டப்ளின் பகுதியில் சர்வதேச விண்வெளி செயலிகள் உருவாக்கும் ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதில் சென்னையை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானியான ராபின் வில்லியம் அடங்கிய 5 பேர் கொண்ட குழு பங்கேற்றனர்.
இந்த குழு 48 மணி நேரத்தில் உருவாக்கிய “செரிட்வென்” என்ற இணைய செயலி, நிலவில் ஏற்படும் நிலநடுக்கங்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் விரிவாக அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டது.
இவர்களின் படைப்பாற்றலை வெகுவாக பாராட்டிய தேர்வுக்குழு, அவர்களை அயர்லாந்தின் தேசிய வெற்றியாளராக அறிவித்ததோடு, நாசாவின் சர்வதேச வேட்பாளராகவும் தேர்ந்தெடுத்து சிறப்பித்தது. தொடர்ந்து டப்ளின் லார்ட் மேயர் அவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.