மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் சகல ஊழியர்களுக்கும் அதிக நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை –  சுகாதார அமைச்சர் 

தற்போதைய பொருளாதார நிலைமையில் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் சகல ஊழியர்களுக்கு வழங்க முடியுமான அதிக நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 
மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்களின் பற்றாக்குறை தொடர்பாகப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் கேட்ட வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்: சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மருத்துவத்துறையைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் காணப்படுகிறார்கள். இன்று காலை அம்மருத்துவர்கள் குழு மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடினார்கள். அதுதவிர அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தையும் சந்திக்கத் தீரமானித்துள்ளார்கள்.

 
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதிக சலுகைகளை சுகாதாரத்துறையினருக்காக வழங்கவுள்ளதாகவும், மேலும் வலியுறுத்தினார்.

 
வடக்குக் கிழக்கு மாகணங்களின் வைத்தியசாலைகள் சுமார் 20 மூடப்படவுள்ள நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பாகவும் கவனத்திற்கொள்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.