97-year-old lawyer Guinness record | 97 வயது வழக்கறிஞர் கின்னஸ் சாதனை

திருவனந்தபுரம் :கேரளாவைச் சேர்ந்த 97 வயது முதியவர் நீண்டகாலம் வழக்கறிஞராக பணிபுரிந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் பி.பாலசுப்பிரமணியன் மேனன்,97. அதிக ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரிந்ததற்காக உலக சாதனை புத்தகமான ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இது தொடர்பாக கின்னஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கேரளாவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மேனன் நீண்டகாலம் வக்கீலாக பணியாற்றியது உறுதி செய்யப்பட்டு, உலக சாதனை புத்தகமான கின்னசில் கடந்த செப்., 11ல் பதிவு செய்யப்பட்டது. 73 ஆண்டுகள் 60 நாட்கள் வழக்கறிஞராக பணியாற்றி இந்த சாதனையை படைத்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை சட்டக் கல்லுாரியில் சட்டப்படிப்பை முடித்த மேனன், பாலக்காட்டின் பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 1950ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை துவங்கி, தன் 97 வயதிலும் வழக்குகளில் ஆஜராகி வருகிறார்.

இந்த சாதனை குறித்து பாலசுப்பிரமணிய மேனன் மேலும் கூறுகையில், ”என்னை நம்பி வழக்குடன் வருபவர்களுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் எப்போதும் செய்வேன்.

”நீதிமன்றங்களில் அதிக நேரம் வாதிடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் வாதங்களும், குறுக்கு விசாரணைகளும் எப்போதும் குறுகியதாகவே இருக்கும்,” என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.