சத்ரபதி சாம்பாஜிநகர், மஹாராஷ்டிராவில் கடவுள் ராமரின் வாழ்க்கை வரலாற்றை கேட்டு முஸ்லிம் குடும்பம் ஒன்று ஹிந்து மதத்துக்கு மாறியது.
மஹாராஷ்டிராவின் அவுரங்காபாதில் சத்ரபதி சாம்பாஜிநகர் உள்ளது. இங்குள்ள அயோத்தியா நகரி மைதானத்தில் கடவுள் ராமர் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
மூன்று நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் ராமர் கதை என்ற பெயரில் ராமரின் வாழ்க்கை வரலாறு குறித்து சொல்லப்பட்டது.
மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பகவத் காரத் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், மஹாராஷ்டிரா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.
அப்போது மஹாராஷ்டிராவின் அஹமது நகரில் இருந்து பங்கேற்ற முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர், ராமரின் வாழ்க்கை வரலாற்றை கேட்டபின் முஸ்லிம் மதத்தில் இருந்து ஹிந்து மதத்துக்கு மாறினர். இதை, மத்திய பிரதேசத்தில் உள்ள பாகேஷ்வர் தாம் பீடத்தின் தலைவர் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
”ஹிந்து மதத்துக்கு மாற யாராவது வற்புறுத்தினரா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு முஸ்லிம் குடும்பத்தின் தலைவர் ஜமீல் நிஜாம் ஷேக், ”குழந்தை பருவத்தில் இருந்தே சனாதன தர்மத்தை நான் பின்பற்றுகிறேன். என்னையும், என் குடும்பத்தாரையும் யாரும் மதம் மாற வற்புறுத்தவில்லை.
”நாங்கள் பல ஆண்டு களாக ராமரையும், கிருஷ்ணரையும் வணங்கி வருகிறோம். விநாயகர் சதுர்த்தியும் நாங்கள் கொண்டாடுவோம்,” என்றார்.
“இந்த நிகழ்வுக்கும், பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என, மத்திய இணை அமைச்சர் பகவத் காரத் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement