பெங்களூரு : கர்நாடகா துணை முதல்வர் சிவகுமாருக்கும், பொது பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கும், பெலகாவி அரசியல் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சிவகுமார் டில்லி சென்றார். அதற்கு முன்பு பெங்களூரு கிரசென்ட் சாலையில் உள்ள, சதீஷ் ஜார்கிஹோளி வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் சதீஷ் ஜார்கிஹோளியை அவரது வீட்டில், சிவகுமாரின் தம்பியும், பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி.,யுமான சுரேஷ் நேற்று சந்தித்தார்.
இதன் பின்னர் சுரேஷ் அளித்த பேட்டி:
எனது தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய, சாலை பணிகள் குறித்து அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியிடம் பேசினேன். அரசு நிதி ஒதுக்கியதும், பணிகள் செய்து தருவதாக உறுதி அளித்து உள்ளார். யார் முதல்வராக இருந்தாலும், அவர்களுக்கு எனக்கு ஆதரவு உண்டு. ‘முதல்வர் ஆவேன்’ என்று சதீஷ் ஜார்கிஹோளி கூறியிருப்பதில் தவறு இல்லை.
எம்.எல்.ஏ.,க்களுக்கு, அமைச்சர் ஆக வேண்டும் என்றும், அமைச்சர்களுக்கு முதல்வர் ஆக வேண்டும் எனவும், ஆசை இருப்பது அரசியலில் சகஜம். காங்கிரஸ் அரசு ஐந்து ஆண்டுகளும், ஆட்சியில் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. பா.ஜ.,வினருக்கு வேறு வேலை இல்லை. இதனால் ‘ஆப்பரேஷன் தாமரை’ செய்ய போவதாக பேசுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement