பாலக்காடு:கேரள மாநிலம், குருவாயூர் கோவிலில் துவங்கிய செம்பை சங்கீத உற்சவம், வரும், 27ம் தேதி வரை நடக்கிறது.
கேரளாவின் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், கார்த்திகை மாத ஏகாதசி உற்சவம், வரும், 27ம் தேதி நடக்கிறது. உற்சவத்தை முன்னிட்டு, குருவாயூர் கோவிலில், செம்பை சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது.
நேற்று முன்தினம் செம்பை நினைவு விருது பெற்ற, பிரபல இசைக்கலைஞர் மதுரை சேஷகோபாலனின் சங்கீத அர்ச்சனை நேற்று நடந்தது.
இவருக்கு, சம்பத் – வயலின், ஹரிநாராயணன் – மிருதங்கம், திருப்பூணித்துறை ராதாகிருஷ்ணன் – கடம், மணிகண்டன் – தம்புரா ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.
முன்னதாக கோவில் தந்திரி பிரஹ்மஸ்ரீ தினேசன் நம்பூதிரி சங்கீத மண்டபத்தில் குத்துவிளக்கு ஏற்றினர். தொடர்ந்து செம்பை சங்கீத உற்சவம் துவங்கியது. ஏகாதசி உற்சவ நாள் வரை இந்த சங்கீத உற்சவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement