பணம் கிடைக்கும் விதத்தைப் பொறுத்து நெல்லை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும், போதியளவு அறுவடை காணப்படுவதால் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உர விநியோக திட்டங்கள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த போகத்தின்போது, உரிய நேரத்தில், உரிய திகதிக்கு முனனர்;, உரம் வழங்கப்பட்டது. கடந்த பருவத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை. கடந்த போகத்தில்; அதிகளவு நெல் அறுவடை கிடைத்தது. சீன அரசாங்கத்தினால் எரிபொருள் மானியமாக டீசல் வழங்கப்பட்டது. அது, அறுவடை நேரத்தில் கொடுக்கப்பட்டது. மீண்டும் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது. நிதி நெருக்கடியின் மத்தியில் இந்த விநியோகங்கள் நடந்து வருகின்றன. நெல் கொள்வனவு பணம் கிடைக்கும் விதத்தைப் பொறுத்து மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.