மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்;.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
மோசடி மற்றும் ஊழலைத் தடுக்கும் வகையில் இ-மோட்டாரிங் திட்டத்தின் கீழ் மோட்டார் வாகன போக்குவரத்துத்; திணைக்களம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான அனுமதியை நீதிபதிகள் வழங்குவார்கள் என நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.
அத்துடன், 10,000க்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன. திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.