இன்றைய உலகத் தொலைக்காட்சி தினத்தில் நாம் ஒன்றிணைந்து மிகச் சிறந்த ஊடகக் கலாச்சாரத்தை நோக்கிச் செல்வதற்கு உறுதி ஏற்போம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்;.
உலகத் தொலைக்காட்சி தினத்தன்று, வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், என்ற வகையில், உலகிலும் நம் நாட்டிலும் தொலைக்காட்சி தொடர்பாடலில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.