கார்டூம்,
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே கடந்த ஏப்ரலில் மோதல் ஏற்பட்டது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டிற்குள்ளேயும் மற்றும் அண்டை நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்று உள்ளனர்.
இதுவரை 9 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கின்றது. இந்நிலையில், சூடான் மற்றும் தெற்கு சூடான் இடையே சர்ச்சைக்குரிய பகுதியை சொந்தம் கொண்டாடுவதில் மோதல் ஏற்பட்டது.
இதில், அபைய் என்ற நிர்வாக பகுதிக்கு உட்பட்ட இரண்டு கிராமங்களுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த சம்பவத்தில், ஐ.நா. அமைதி காப்பாளராக செயல்பட்டு வந்த கானா நாட்டை சேர்ந்த வீரர் உள்பட 32 பேர் பலியாகி உள்ளனர். 20 பேர் காயமடைந்தனர். எனினும், இந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. நிலைமை சீராகி, அமைதியாக காணப்படுகிறது.