சென்னை: நள்ளிரவு முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். மழை காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்குவதால், அதை அகற்றும் பணியில் அதிகாரிகளும் ஊழியர்களும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுவதால், இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், […]