சென்னை தமிழக போக்குவரத்துக் கழகம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2700 சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது. இன்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ”திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீபத் திருநாள் 26/11/2023 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும், 27/11/2023 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும், 25/11/2023 சனிக்கிழமை முதல் 27/11/2023 வரை அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காகத் தமிழக […]