திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் ஆலயம் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமரிசையானதாகும். கடந்த 17 ஆம் தேதி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் தொடங்கியது. கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீப தரிசன நாளான 26-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு பஞ்ச […]