மன்சூர் அலிகானுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம்
நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாகப் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் சினிமாவில் உள்ள பல சங்கங்கள், சினிமா பிரபலங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்கள்.
அது போல தற்போது தெலுங்குத் திரையுலகினரும் த்ரிஷாவுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளார்கள். மூத்த நடிகரான சிரஞ்சீவி, “த்ரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சில கண்டிக்கத்தக்க கருத்துக்கள் என் கவனத்திற்கு வந்தது. இந்த கருத்துக்கள் ஒரு கலைஞருக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுக்கும் அருவருப்பான ஒன்றாகும். இந்தக் கருத்துக்களை கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கப்பட வேண்டியவை. அவர்கள் வக்கிரத்தால் துவண்டு விடுகிறார்கள். இந்த விஷயத்தில் த்ரிஷாவுக்கு ஆதரவாகவும், ஒவ்வொரு பெண்ணுக்காகவும் நான் ஆதரவாக நிற்பேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே நடிகர் நிதின் உள்ளிட்ட சில தெலுங்கு சினிமா பிரபலங்களும் மன்சூர் அலிகான் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.