நியூயார்க் இரு சர்வதேச எம்மி விருதுகளை இந்தியா வென்றுள்ளது. நேற்று இரவு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 51 ஆவது சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஸ்டாண்ட்அப் காமெடியன் வீர் தாஸ், சிறந்த நகைச்சுவைக்கான எம்மி விருது பெற்றார். அவருக்குச் சிறந்த காமெடி பிரிவில் நெட்பிளிக்சின் “வீர் தாஸ்: லேண்டிங்” என்ற நகைச்சுவை நிகழ்ச்சிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை “டெர்ரி கேர்ள்ஸ் சீசன்-3” என்ற பிரிட்டிஷ் நகைச்சுவை தொடருடன் இந்த விருதை வீர் தாஸ் பகிர்ந்துகொண்டார். நகைச்சுவை பிரிவில் சர்வதேச எம்மி விருதை […]