ஆர்க்ஸா எனெர்ஜிஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மாண்டிஸ் எலகட்ரிக் பைக்கின் அறிமுக விலை ரூ.3.60 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் 1000 வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு கட்டணம் ரூ.10,000 ஆக நிர்ணையிக்கப்பட்டு டெலிவரி ஏப்ரல் 2024 முதல் துவங்க உள்ளது.
2015 ஆம் ஆண்டு துவங்கி முன் மாதிரி தயாரிப்பு பணிகள் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட மாண்டிஸ் எலக்ட்ரிக் பைக் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Orxa Mantis
ஆர்க்ஸா மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளர் மாண்டிஸ் பைக்கில் 8.9 kWh லித்தியம் ஐயன் பேட்டரியை பொருத்தி அதிகபட்சமாக 20.5kW (27.5bhp) பவர் மற்றும் டார்க் 93 Nm வெளிப்படுத்தும். டாப் ஸ்பீடு 135km/hr வேகத்தை எட்டுவதுடன், ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 221 கிமீ IDC ரேஞ்சு வழங்கும் என உறுதிப்படுதப்பட்டுள்ளது.
பைக்குடன் 1.3kW சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் 5 மணி நேரத்தில் 0 முதல் 80% வரை மாண்டிஸ் சார்ஜ் செய்ய முடியும். கூடுதலாக 3.3kW பிளிட்ஷ் சார்ஜர் செய்ய நேரத்தை 2.5 மணிநேரம் மட்டுமே தேவைப்படும். ஆனால் இதற்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
182 கிலோ எடை கொண்ட மாண்டிஸ் மாடலில் பொருத்தப்பட்டுள்ள சேஸ் ஆனது ஏரோ ஸ்பேஸ் கருவிகளுக்கு பயன்படுத்துகின்ற தரத்தை பெற்ற அலுமினியம் சேஸிஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மெட்டீரியலை பயன்படுத்தி எந்தவொரு இந்திய நிறுவனமும் சேஸ் செய்தது இல்லை, இதுவே முதல் முறையாகும்.
180 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்ட பைக்கில் ரைட் பை வயர் நுட்பத்தை பெற்றதாகவும் 5 அங்குல TFT தொடுதிரை அமைப்பினை கொண்டு பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்குகின்றது.
வரும் ஏப்ரல் 2024 முதல் டெலிவரி வழங்கப்பட உள்ள நிலையில், முதலில் முன்பதிவு செய்யும் 1000 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ரூ.10,000 ஆக வசூலிக்கப்படும், அதன் பிறகு முன்பதிவு கட்டணம் ரூ.25,000 ஆக உயர்த்தப்படும் என ஆர்க்ஸா நிறுவனம் தெரிவித்துள்ளது.