`அம்மையார் ஜெயலலிதாவை மனதார பாராட்டுகிறேன்!’ – முதல்வர் ஸ்டாலின்
“முழுக்க முழுக்க மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம். முதல்வரே வேந்தராக இருக்கும் உரிமை இந்தப் பல்கலைக்கழகத்துக்கு இருக்கிறது. முதல்வரே வேந்தராக இருந்தால்தான் பல்கலைக்கழகங்கள் சிறப்பாக வளரும், மற்றவர்கள் கையிலிருந்தால் அவற்றின் நோக்கமே சிதைந்துவிடும் என்று எண்ணித்தான், 2013-ம் ஆண்டே இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர்தான் இருக்க வேண்டுமென அம்மையார் ஜெயலலிதா முடிவுசெய்திருக்கிறார். அதை நான் மனதார பாராட்டுகிறேன்.” – முதல்வர் ஸ்டாலின்.