இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் யமஹா R3 ஃபேரிங் ஸ்போர்ட்ஸ் மற்றும் MT03 நேக்டூ ஸ்போர்ட்ஸ் என இரு மாடல்களும் டிசம்பர் 15ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள டிராக் தினத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
முதற்கட்டமாக இரண்டு பைக்குகளும் உள்நாட்டில் தயாரிக்கப்படாமல் CBU முறையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதனால் விலை சற்று கூடுதலாக அமைந்திருக்கலாம்.
Yamaha R3, MT-03
இந்தியாவில் விற்பனையில் கிடைக்கின்ற ஆர்சி390, அப்பாச்சி ஆர்ஆர் 310, பிஎம்டபிள்யூ 310ஆர் உட்பட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளும் யமஹா ஆர்3 பைக்குடன், நேக்டூ ஸ்டைலை பெறுகின்ற எம்டி03 பைக் ஆனது 390 டியூக், அப்பாச்சி ஆர்டிஆர்310, பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
இரண்டு பைக்குகளில் 321cc பேரலல் ட்வின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் அதிகபட்ச பவர் 40.4 bhp ஆனது 10.750 rpm-லும் , மற்றும் 9.000 rpm-ல் 29.4 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
ஆர்3 பெர்ஃபாமென்ஸ் ரக ஃபேரிங் ஸ்டைல் பெற்ற 298 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 220 மிமீ பின்புற டிஸ்க் பிரேக் உடன் முன்புறத்தில் 37 மிமீ இன்வெர்டேட் ஃபோர்க் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையில் மோனோஷாக் அப்சார்பர் பின்புறத்தில் வழங்கப்பட்டு, டூயல்-சேனல் ஏபிஎஸ் பெற்றதாக விளங்கும். 14 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் டேங்க் கொண்டு ஆர்3 பைக்கின் மொத்த எடை 169 கிலோ மட்டுமே ஆகும்.
முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 100 க்கு மேற்பட்ட ப்ளூ ஸ்குயர் டீலர்கள் மூலம் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.