சருமம் மற்றும் கேசத்தை பொறுத்தவரை, செய்யக் கூடாத பியூட்டி மிஸ்டேக்ஸை நிறைய இருக்கு. பியூட்டி தெரபிஸ்ட் லலிதா சுட்டிக்காட்டின சில தவறுகள் இங்க…
* முகத்துக்கு அடிக்கடி ஸ்கிரப் பயன்படுத்தக் கூடாது. அது சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசையை நீக்கிடும். மேலும், அது சருமத்துக்குக் கடுமையானதாவும் இருக்கும். முகத்தை மென்மையாதான் கையாளணும். ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்கிரப் பயன்படுத்தினா போதும்.
* எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளிவிடக் கூடாது. அப்படிச் செய்றதால அது போயிடவும் செய்யாது. அதுக்குள்ள இருக்குற நுண்ணுயிர் இன்னும் ஆழமாகச் சென்று பாதிப்பு அதிகமாகவே செய்யும்.
* உறங்கச் செல்லும் முன்பு மேக்கப் ரிமூவ் செய்றதுல சோம்பேறித்தனம் கூடவே கூடாது. மேக்கப் உடன் தூங்கினா உங்க சருமத்துக்கு சில மடங்கு வேகமா வயசாகிடும்னு சொல்றாங்க சரும நிபுணர்கள்.
* ரசாயனங்களால் ஆன ப்ளீச்… அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்கணும். மாறா, தேன், உருளைக்கிழங்கு, தயிர் போன்ற இயற்கை பொருள்களை பயன்படுத்தலாம்.
* உலர் திராட்சையை இரவு முழுவதும் தண்ணீர்ல ஊறவெச்சு, தினமும் காலையில சாப்பிட்டு வந்தா சருமத்துக்கு கிடைக்கும் நேச்சுரல் பிளஷ்.
* நீங்க பயன்படுத்தும் துண்டை மூன்று நாள்களுக்கு ஒருமுறை துவைக்கணும். தலையணை உறைகளை ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை மாற்றணும். ஏன்னா, இதுலயெல்லாம் இருக்கும் நுண்ணுயிர்கள் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
* வெந்நீரில் குளிப்பது நல்லதுதான்னாலும், கூந்தலை அலச வெந்நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கணும். அது கேசத்தின் வேரை பாதிப்பதோடு, பலவீனமாக்கும்.
* மேல் உதடு, தாடையில் ரோம வளர்ச்சி ஹார்மோனல் இம்பேலன்ஸ்னால ஏற்படக்கூடும். அது அழகு பிரச்னை இல்ல, ஆரோக்கியப் பிரச்னைனு புரிஞ்சுக்கிட்டு மருத்துவ ஆலோசனை பெறணும்.
* சில யூடியூப் வீடியோக்கள்ல ‘ஸ்கின் வொயிட்டனிங்க்கு பேக்கிங் சோடா’னு பார்த்துட்டு, அதை டிரை செய்யக்கூடாது. சோடா சருமத்தை அதிகமா உலரச் செய்யும்; பருக்கள், அரிப்பு, வீக்கம்னு பல பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.
* கேசத்தை ஸ்ட்ரெயிட்டனிங் பண்ணும்போது அந்த ஹீட் வேர்களைப் பாதிக்கும். முடி உதிர்வதும் அதிகரிக்கும். அதனால அதைத் தவிர்ப்பதே பரிந்துரைக்கத்தக்கது.
இறுதியா ஒரு விஷயம். என்னதான் பியூட்டி புராடக்ட்ஸ் பயன்படுத்தினாலும், ஃபேஸ் பேக்ஸ் போட்டாலும் கிடைக்காத பொலிவு… ஒரு விஷயத்தைப் பண்ணினா கிடைச்சிடும். அது, சத்தான உணவை சாப்பிடுறது, நிறைய தண்ணி குடிக்கிறது. அதுதான் குளோயிங் ஸ்கின்னுக்கான ஓப்பன் சீக்ரெட்!