![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/11/1701247692_NTLRG_20231129122300516661.jpg)
த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை : மன்சூர் அலிகான் அடித்த அந்தர் பல்டி
நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு கண்டனங்கள் எழுந்தன. நடிகை குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு த்ரிஷாவிடம், திரிஷாவே என்னை மன்னித்து விடு. இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும் போது நான் ஆசீர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக. ஆமீன் என்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தார் மன்சூர்.
த்ரிஷாவும் மன்னிப்பது தெய்வ பண்பு என கூறியிருந்தார். அதையடுத்து அந்த பரபரப்பு ஓய்ந்தது. என்றாலும் த்ரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்போவதாக மன்சூர் அலிகான் கூறினார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் ஒரு பேட்டியில், ‛‛மன்னித்துவிடு என்று நான் கூறவில்லை. மரணித்து விடு என்றுதான் கூறினேன். என்னுடைய பிஆர்ஓ தவறாக புரிந்து கொண்டு மன்னித்துவிடு என எழுதிவிட்டார். போனில் சொன்னதால் இந்த தவறு நடந்துள்ளது. அந்த நேரத்தில் மீண்டும் பிரச்னையை வளர்க்க வேண்டாம் என்பதால் அந்த நேரத்தில் அமைதியாக இருந்து விட்டேன்,'' என்று கூறியிருக்கிறார் மன்சூர் அலிகான்.