சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை, பின்னடைவு ஏற்பட்டுள்ளது என மியாட் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் விஜயகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. அண்மையில் உடல்நிலை பாதிப்பு காரணமாக, அவர் தனியார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18ந்தேதி அனுமதிக்கப்பட்டார். முன்னதாக 2 நாட்களாக இருமல், சளி மற்றும் […]