2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் இன்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பி.வை.ஜி ரத்னசேகர எழுப்பிய வாய்மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்..
பரீட்சை பரீட்சை பெறுபேறுகள் தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன. எதிர்காலத்தில் குறிப்பிட்ட திகதியில் பரீட்சைகள் நடத்தப்பட்டு, குறிப்பிட்ட திகதியில் பெறுபேறுகள் வெளியிடவுள்ளோம். புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், இந்த மதிப்பீட்டுச் செயல்பாட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, அவற்றை விரைவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை அடுத்த வருடம் மே அல்லது ஜூன் மாதத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளோம். பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இம்முறை இடம்பெற்ற பரீட்சை பெறுபேறுகள் தாமதமாகியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பல பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சைகள் நடாத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்;.
ஆனால் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை திட்டமிட்டபடியே உரிய திகதியில் வெளியிட்டோம்;. இம்முறை சுமார் 06 இலட்சம் பேர் க.பொ.த சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். பரீட்சை முடிவுகளை விரைவுபடுத்துமாறு பரீட்சை திணைக்களத்திற்கு அறிவித்துள்ளோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.