வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலத்தை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
2021 ம் ஆண்டு முதல் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் செயல்பட்டு வருகிறார். உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. அவருக்கு ஐபிஎல் அணிகளிடம் இருந்தும் அழைப்பு வந்தது. இதனையடுத்து ராகுல் டிராவிட் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது. அவருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. டிராவிட் போல் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்களின் பதவிக்காலமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement