வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: இந்தியாவில் உள்ள தூதரகம் மற்றும் துணைத்தூதரகங்கள் மூலம் 1,40,000 இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி சாதனை படைக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 2022ம் ஆண்டு அக்., முதல் 2023 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இதுவரை இல்லாத சாதனையாக, இந்தியாவில் உள்ள தூதரகம் மற்றும் துணைத்தூதரக அலுவலகங்கள் மூலம் 1,40,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் 10 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டு உள்ளன. வணிகம் மற்றும் சுற்றுலாவிற்காக 8 லட்சம் பார்வையாளர் விசாக்கள் வழங்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் மாணவர்களுக்கு மட்டும் 6 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement