புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்துக்குள் விமான இருக்கைகளுக்கு நடுவே மழைநீர் கொட்டியது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை நெட்டிசன்களும் கலாய்த்து வருகின்றனர்.
பொதுவாகவே மழைக்காலங்களில் அரசுப் பேருந்துக்குள்தான் மழை பெய்யும். ஆனால், சற்று வித்தியாசமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஏர் இந்தியா விமானத்துக்குள் விமான இருக்கைகளுக்கு நடுவே மழைநீர் கொட்டியது போன்ற வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த விடியோவில், இருபக்கமும் பயணிகள் அமரக்கூடிய இருக்கைகளுக்கு நடுப்பகுதி முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது. இந்த விமானத்தில் பயணித்த ஒருவர், அதனை விடியோ எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை வைத்து பல நெட்டிசன்கள் கலாத்து வருகின்றனர்.
Air India ….
fly with us – it’s not a trip …
it’s an immersive experience pic.twitter.com/cEVEoX0mmQ
அதில் ஒருவர் “ஏர் இந்தியா… எங்களுடன் பறந்து செல்லுங்கள்- இது ஒரு பயணமாக மட்டும் இருக்காது, ஒரு மிகச் சிறந்த அனுபவமாகவும் இருக்கும்” என்று கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டுள்ளார். தண்ணீர் விழுந்து கொண்டிருந்தபோதிலும், ஒன்றுமே நடக்காதது போல் அதை கண்டுகொள்ளாமல் பயணிகள் பயணித்தனர். விமானம் எங்கு சென்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை. தொழில் நுட்பகோளாறாக கூட தண்ணீர் கசிந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், விமான நிறுவனம் இதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. ஏர் இந்தியா விமானங்கள் அடிக்கடி இதுமாதிரி வினோத சம்பவங்களில் சிக்குவது புதிதல்ல.