காதலுக்கு கண் முக்கியமல்ல…காதலனின் கண்ணை பதம் பார்த்த காதலி…!

வாஷிங்டன்,

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் காதலர்களுக்கு கண் இருக்கிறது. கண் இருப்பதால்தான் ஒருவரை ஒருவர் பார்த்துத்தான் காதலிக்கிறார்கள். அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினால் மட்டுமே காதல் மலர்கிறது. ஆனால் இங்கு அண்ணல் நோக்கியதோ வேறு பெண்களை. இதனால் வெகுண்ட எழுந்த காதலி காதலனின் கண்ணை பதம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் மியாமி-டேட் கவுன்ட்டியில் சந்த்ரா ஜிமினெஸ் என்ற 44 வயது பெண்மணி ஒருவர் தனது காதலருடன் கடந்த 8 வருடங்களாக வசித்து வருகிறார். காதலன் அடிக்கடி மற்ற பெண்களை பார்த்ததாக தெரிகிறது.

இதற்கிடையே தாங்கள் வளர்க்கும் நாய்க்கு ஊசி போடுவதற்காக இரண்டு வெறிநாய்க்கடி ஊசிகளை (rabies needles) வைத்துள்ளார். மற்ற பெண்களை காதலன் தொடர்ந்து பார்த்து வந்ததால் ஜிமினெஸ்க்கு கடுங்கோபம் வந்துள்ளது. இதனால் ஒரு ஊசியை எடுத்து காதலனின் கண்ணில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

காயம் அடைந்த காதலன் காவல்துறைக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார். போலீசார் அவர்களது வீட்டிற்கு சென்று, காதலனை காப்பாற்றியதுடன், வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் தூங்கிக் கொண்டிருந்த ஜிமினெஸை கைது செய்தனர்.

போலீசார் விசாரணையின்போது, ஆண் நண்பரின் கண்ணில் நான் ஊசியால் தாக்கவில்லை என்று குற்றத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த ஜிமினெஸ், காதலன் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.