சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர்
அருண் மாதேஸ்வரன் தமிழில் ராக்கி, சாணிக் காகிதம் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது நடிகர் தனுஷை வைத்து 'கேப்டன் மில்லர்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இதிலிருந்து முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பொங்கலுக்கு படம் திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற தனது சமூக வலைதள கணக்கை தற்காலிகமாக எந்த அறிவிப்பின்றி நீக்கியுள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.