தரமற்ற தேங்காய் எண்ணெயை இந்த நாட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது எனவும், அவ்வாறான தேங்காய் எண்ணெய் மீண்டும் திருப்பி ஏற்றுமதி செய்யப்படும் எனவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (30) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எழுப்பிய வாய்மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உரிய ஆய்வுகளின் பின்னர், அவை தரதற்றவை என்று தெரியுமிடத்து மீள் ஏற்றுமதி மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், இறக்குமதி செய்யப்படும் சில தேங்காய் எண்ணெய் தரம் வாய்ந்ததா என கூற முடியாது. இவற்றை தரப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.