மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை 25,000 ஆக உயர்கிறது: பிரதமர் மோடி நடவடிக்கை

புதுடெல்லி: மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000 லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரைப் பயனாளிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது, மகளிர் தலைமையிலான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில், பிரதமரின் மகளிர் வேளாண் ட்ரோன் மையத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட உள்ளது.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்படுவதன் மூலம் இந்த தொழில்நுட்பத்தை அவர்கள் வாழ்வாதார உதவிக்குப் பயன்படுத்த முடியும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் 15,000 ட்ரோன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்களைப் பறக்கவிடுவதற்கும் பயன்படுத்துவதற்கும் பெண்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்படும் என்றும், இந்த முயற்சி வேளாண்மையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்தைக் குறைந்த கட்டணத்துடனும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மாற்றும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்கீழ் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்யும் மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டன. தியோகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 10,000மாவது மக்கள் மருந்தக மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், நாட்டில் உள்ள மக்கள் மருந்தக மையங்களின் எண்ணிக்கையை 10,000லிருந்து 25,000 ஆக உயர்த்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.