புதுடெல்லி,
இந்திய ஆண்கள் ஆக்கி அணி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 நாடுகளுக்கு இடையேயான தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய ஆக்கி கூட்டமைப்பு இன்று அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்மன்ப்ரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
24 வீரர்கள் கொண்ட இந்திய அணி விவரம் பின்வருமாறு;-
ஹர்மன்ப்ரீத் சிங் (கேப்டன்), ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன், கிரிஷன் பகதூர் பதக், சூரஜ் கர்கேரா, ஜுக்ராஜ் சிங், ஜர்மன்ப்ரீத் சிங், அமித் ரோஹிதாஸ், , வருண் குமார், சுமித், சஞ்சய், நிலம் சஞ்சீப், யஷ்தீப் சிவாச், விவேக் சாஹர் பிரசாத், நீலகண்ட சர்மா, ஷாஹர்லகன் பிரஸ்தாஸ்குமார், சிங்ஹர்லாஸ் குமார் , ரபிச்சந்திர சிங் மொய்ராங்தேம், மன்தீப் சிங், அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித் குமார் உபாத்யாய், கார்த்தி செல்வம், தில்ப்ரீத் சிங் மற்றும் ஆகாஷ்தீப் சிங்