23 M.Sc., degree after failure | 23 தோல்விக்கு பின் எம்.எஸ்சி., பட்டம்

போபால்:மத்தியபிரதேசத்தை சேர்ந்த 56 வயது செக்யூரிட்டி கணிதத்தில் முதுநிலை பட்டம் பெற்று அசத்தியுள்ளார். 23 முறை தோல்வியை சந்தித்த பின்னரும் அயராது உழைத்து இந்த வெற்றியை பெற்றுள்ளார்.

ம.பி.,யின் ஜபல்பூரை சேர்ந்தவர் ராஜ்கரன் பரூவா, 56. செக்யூரிட்டியாக பணியாற்றி வரும் இவரது மாத சம்பளம் 5,000 ரூபாய்.

அங்குள்ள ராணி துர்காதேவி பல்கலையில் படித்த இவர், விடா முயற்சியால் கணிதத்தில் எம்.எஸ்சி., பட்டம் பெற்றுள்ளார்.

இதற்காக தனது கால்நூற்றாண்டை செலவிட்டுள்ள பரூவா, 23 முறை தோல்விக்கு பின் இந்த வெற்றியை பெற்றுள்ளார்.

முன்னதாக கடந்த 1996ம் ஆண்டில் தொல்லியல் துறையில் முதுநிலை பட்டம் பெற்றார்.

இது இவரது இரண்டாவது முதுநிலை பட்டம். இரவில் பங்களாவில் செக்யூரிட்டியாகவும், பகலில் உதவியாளராகவும் பணியாற்றியபடி தன் கனவு படிப்பை முடித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.