பெங்களூர்: நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான காந்தாரா படம் மிகப்பெரிய பாராட்டுக்களையும் வசூலையும் குவித்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பூஜை கடந்த இரு தினங்களுக்கு முன்பு போடப்பட்டது. காந்தாரா படத்தின் முன்கதையாக படத்தின் இரண்டாவது பாகம் உருவாக்கப்பட உள்ளதாக ரிஷப் ஷெட்டி முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.