சீனாவின் SAIC குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் வரத்தக விரிவாக்கத்திற்கு என ஜேஎஸ்டபிள்யூ குழுமத்துடன் இணைந்து எலக்ட்ரிக் வாகனகளை அறிமுகப்படுத்தவும், உள்நாட்டில் தயாரிக்க மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பினை விரிவுப்படுத்த உள்ளது.
இந்திய-சீன எல்லை பிரச்சனை காரணமாக எம்ஜி மோட்டார் தனது வரத்தகத்தை விரிவுப்படுத்த முடியாமல் போராடி வந்த நிலையில் 35 சதவிகிதம் பங்குகளை இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ குரூப் கைபற்றியுள்ளது.
MG Motor and JSW Group
இந்திய ஜே.எஸ்.டபிள்யூ குழுமம் 35 % பங்குகளை கைப்பற்றி உள்ள நிலையில் எதிர்கால தேவைகளுக்கான எலக்ட்ரிக் வாகன சந்தைக்கான விரிவாக்கத்தை மேற்கொள்ள எம்ஜி மோட்டார் தயாராகி வருகின்றது.
இந்த இரு நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம் மூலம் புதிதாக வாகனங்களை அறிமுகம் செய்யவும், எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யவதுடன் மொத்த உற்பத்தி திறனை அதிகரிக்கவும் புதிய ஆலையை நிறுவ வாய்ப்புகள் உள்ளது.
SAIC மோட்டார் மற்றும் JSW குழுமம் ஆகிய இரண்டும் இந்திய சந்தைக்கான பிராந்தியத்தில் எதிர்கால இயக்கத்தை மறுவரையறை செய்யும் போது நிலையான வளர்ச்சியை அடைவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
புதுமை, தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகள் ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்துவதன் மூலம், இந்த கூட்டு முயற்சியானது இந்தியாவின் வாகனத் துறையில் மேலாதிக்க சக்தியாக எம்ஜி மோட்டரின் இருப்பை உயர்த்த முயற்சிக்கிறது.