காஜியாபாத்:இந்திரபுரம் பூங்காவில், காவலாளியை கொலை செய்தவரை போலீசார் தேடுகின்றனர்.
தேசிய தலைநகர் பிராந்தியத்தின் காஜியாபாத் இந்திரபுரம் பூங்காவில் ஒருவர் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் வந்தனர். அங்கு, தொண்டையில் வெட்டுக் காயங்களுடன் கிடந்த உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்து கிடந்தவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, அர்சூஷேக், 30, என்பதும் தனியார் நிறுவன காவலாளி என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
சம்பவத்தன்று, மது அருந்தியுள்ளார். அப்போது, அறிமுக இல்லாத ஒருவருடன் ஏற்பட்ட தகராறில், கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
காலி மது பாட்டில் மற்றும் கத்தி ஆகியவை அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன. போலீசார் கொலையாளியை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement