பீதர், கர்நாடகாவில், தொழிலதிபர் நெற்றியில் துப்பாக்கி வைத்து மிரட்டி, 3.50 கோடி ரூபாயை கொள்ளை அடித்த, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதியைச் சேர்ந்தவர் உமாசங்கர் பரத்வாஜ், 45; தொழிலதிபர். கடந்த 28ம் தேதி இரவு ஹைதராபாதில் இருந்து, கர்நாடக மாநிலம், பீதர் வழியாக திருப்பதிக்கு காரில் சென்றார். பசவகல்யாண் பகுதியில் சென்ற போது, இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர், காரை மறித்தனர்.
உமாசங்கரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டினர். காரின் பின் இருக்கையில், ஒரு பையில் இருந்த 3.50 கோடி ரூபாயை கொள்ளையடித்து விட்டு தப்பினர். இதுகுறித்து பசவகல்யாண் ரூரல் போலீசில், உமாசங்கர் புகார் செய்தார். போலீசார் விசாரித்தனர்.
உமாசங்கரிடம் கொள்ளை அடித்த பசவகல்யாணின் குண்டுரெட்டி, 35 விஜய்குமார் ரெட்டி, 37 சஞ்சய் ரெட்டி, 30 ஆகியோரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து, 2.62 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள, மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement